ECONOMYNATIONALRENCANA PILIHAN

பொருளாதாரத்தை வலுப்படுத்த மக்களின் நிதி ஆற்றல், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பீர்!

கோலாலம்பூர், பிப்.14-

மக்கள் மத்தியில் செலவு செய்யும் ஆற்றலை உயர்த்துவதற்காக பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்வதோடு இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்துவது அவசியம் என்று முதலீட்டு வங்கி ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
“பொருளாதார மந்த நிலையின் போது பொது மக்கள் செலவு செய்வதை ஊக்குவிக்கும் இந்தோனேசியாவின் நடவடிக்கையை நாடு முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.

மக்களின் குறிப்பாக இளைஞர்களின் பணப் பைகளில் ரொக்கத்தை வைப்பதன் மூலமாக நாட்டு பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறுவதற்கு அரசாங்கம் வழி வகுக்கலாம் என்று அவர் சொன்னார்.
அதே வேளையில், இளைஞர்களின் தொழில் ஆற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது அவசியமாகும் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டில் 11.9 விழுக்காடாக இருந்த வேலையில்லா விகிதாச்சாரம் 2011ஆம் ஆண்டில் 9.7 விழுக்காடாக சரிந்தது. ஆயினும் 2018ஆம் ஆண்டில் அது 10.9 விழுக்காடாக உயர்ந்தது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றார் அவர்.


Pengarang :