RENCANA PILIHANSELANGOR

ரிம.3 ஆயிரம் மாத வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்கள்’ சிலாங்கூர் மருத்துவ உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

ஷா ஆலம், பிப்.19-

சிலாங்கூர் மருத்துவ உதவித் திட்டம் தற்போது மாதம் 3,000 ரிங்கிட்டிற்கும் வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களோடு மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கும் நீட்டிக்கப்பட்டுளது. இத்திட்டத்தின் கீழ் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை, கண் புரை, சிறிய அறுவை சிகிச்சை, செயற்கை கால், சாதனங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பெறுன் இதர சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் http://bantuansihat.selangor.gov.my என்ற இணையத் தளம் மூலமாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என்று அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனிடையெ, இத்திட்டத்திற்காக மாநில அரசு 5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாஹ்முட் கூறினார்.

“சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகள் முதலில் தங்களின் சிகிச்சையை பெற்று அதன் பின்னர் சம்பந்தப்பட்ட சிகிச்சை கட்டண ரசீதைக் கொண்டு அக்கட்டணத்தை இத்திட்டத்தின் கீழ் கோரலாம்” என்று அவர் விவரித்தார்.


Pengarang :