Dato’ Seri Amirudin Shari berbual bersama tetamu pada Majlis Penyerahan Kunci Rumah Laman Haris di Eco Grandeur pada 16 Februari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

20 ஆண்டுகளாக தடைப்பட்டு கிடந்த வீடமைப்புத் திட்டம்: நிறைவு பெற்றதால் பல தரப்பினருக்கு மகிழ்ச்சி!

கோல சிலாங்கூர், பிப்.17-

20 ஆண்டு காலமாக நீடித்து வந்த பசுமைப் புரட்சி வீடமைப்புத் திட்டம் 1 & 2 தீர்வு காணப்பட்டதானது பல தரப்பினருக்கு இனிய நினைவுகளை மலரச் செய்திருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். “பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் இவ்விவகாரத்தை மாநில சட்டமன்றம் வரை முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆயினும் இவ்விவகாரம் தற்போது நல்ல முறையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளது” என்றார் அவர்.

“நிச்சயம் இன்றைய தினம் பலருக்கு இனிய நினைவலைகளை ஏற்பத்தி இருக்கும். நீண்ட கால போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்த்துள்ள. இந்த விவகாரத்திற்குத் தீர்வு கிடைக்கக் கூடாது என்ற விரும்பிய தரப்பினரும் உள்ளனர்” என்றார்.
“ஆயினும், விடா முயற்சியினால் இதற்கு ஒரு விடிவு ஏற்பட்டுள்ளது. இது என்னுடைய முயற்சி என்று நான் கூற மாட்டேன். ஆனால், முந்தை தலைமைத்துவம் மக்களின் நலனைக் கருதி தொடங்கிய ரூமா ஈடாமான் இனிதே வெற்றி பெறத் தொடர்ந்து முயற்சிப்பேன்” என்று எகோ கிராண்டியுரில் நடைபெற்ற லாமான் ஹாரிஸ் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளுக்கு சாவி வழங்கிய நிகழ்ச்சியில் அமிருடின் உறுதியளித்தார்.


Pengarang :