Ng Sze Han bercakap ketika sidang media Mesyuarat Jawatankuasa Tetap Kerajaan Tempatan Negeri Selangor Bil. 1/2020 di Ibu Pejabat MBPJ, Petaling Jaya pada 18 Februari 2020. Foto HAFIZ OTHMAN
SELANGOR

3 ஆண்டுகளில் 1,278 குழாய் உடைப்பு சம்பவங்கள்

பெட்டாலிங் ஜெயா, பிப்.18-

குத்தகையாளரின் கவனக் குறைவினால் 2017ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் மொத்தம் 1,278 குழாய் உடைந்த சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கத்தின் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்துடன் செயல்பட்டால் இச்சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்று ஊராட்சி துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

“இந்த விவகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட குத்தகையாளரின் வேலையை குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு நிறுத்து வைக்க ஊராட்சி துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.
“மார்ச் 1ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும் வேலை பெர்மீட்டுகளில் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தும் கூடுதல் அதிகாரத்தை ஊராட்சி மன்றம் கொண்டிருக்கும்” என்று அவர் விளக்கமளித்தார்.

கடந்த மூன்றாண்டிகளில் கோபாக்கில் 483 குழாய் உடைப்பு சம்பவங்களும் பெட்டாலிங்கில் 225 சம்பவங்களும் கோலாலம்பூரில் 221 சம்பங்களும் நடைபெற்றிருந்ததைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.


Pengarang :