Kakitangan KDEBWM menyerahkan tong sampah di satu lokasi di Ampang Jaya bagi membolehkan petugas seperti polis dan tentera membuang sampah dengan lebih mudah, sekali gus membuat persekitaran lebih bersih. Foto ihsan KDEBWM
SELANGOR

அம்பாங் ஜெயா பகுதியில் பிரத்தியேக குப்பை தொட்டிகள்! – கேடிஇபி

ஷா ஆலம், மார்ச் 31-

நடமாட்ட கட்டுப்பாடு காலத்தில் சாலைத் தடுப்பு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன் வரிசை பணியாளர்களின் பயனீட்டிற்காக அம்பாங் ஜெயா சுற்று வட்டாரப் பகுதிகளில் கேடிஇபி திடக் கழிவு நிர்வாகம் குப்பை தொட்டிகளை தயார் செய்துள்ளது. தியாரா அம்பாங், ஜாலான் அம்பாங், யுகே பெர்டானா நுழைவாயில், ஜாலான் கிள்ளான் கேட் மற்றும் ஜாலான் செராஸ் இண்டா ஆகிய பகுதிகளில் 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனத்தின் பொது தொடர்பு மற்றும் ஊடகத் தலைவர் மாஹ்ஃபிஸா தார்மிடி கூறினார்.

இந்நடவடிக்கையானது சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகள் தங்களின் குப்பைகளை வீசுவதற்கு வாய்ப்பளிப்பதோடு அப்பகுதிகளின் தூய்மையும் பேணப்படும் என்றார் அவர்.
அதே வேளையில், இக்கழிவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை துணை குத்தகை நிறுவனப் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் மேற்கொள்கின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :