KUALA LUMPUR, 25 Feb — Datuk Pengelola Bijaya Diraja Istana Negara Datuk Ahmad Fadil Shamsuddin bercakap pada sidang media di Istana Negara hari ini.
–fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

KUALA LUMPUR, Feb 25 — Datuk Pengelola Bijaya Diraja Istana Negara Datuk Ahmad Fadil Shamsuddin briefing the media at the Istana Negara today.
–fotoBERNAMA (2020) COPYRIGHTS RESERVED

NATIONALRENCANA PILIHAN

அரண்மனை பணியாளர்கள் ஏழு பேருக்கு கோவிட்-19?

கோலா லம்பூர், மார்ச் 26:

மேன்மை தங்கிய மாமன்னர் அரண்மனை ஊழியர்களில் ஏழு பேர் கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவரது துணைவியார் துங்கு ஹஜா அஜீசா அமினா மைமுனா ஆகியோர் கோவிட்-19 சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

“இந்த செயல்முறையின் விளைவாக, நேற்று தொடங்கி 14 நாட்களாக அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்” என்று கோலாலம்பூரில் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று பிரதமர் டான் ஸ்ரீ முகிதீன் யாசினை சந்திக்க நடைபெறவிருந்த வாராந்திர கூட்டத்திற்கும், அடுத்தடுத்த அமர்வுகளுக்கும் கோவிட்-19 தொற்று நிலைமை சரியாகும் வரை பேரரசர் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Pengarang :