NATIONALRENCANA PILIHAN

அரிசி கையிருப்பு தேவைக்கு அதிகமாகவே உள்ளது- விவசாய அமைச்சர்

கோலா லம்பூர், மார்ச் 28:

நாட்டின் அரிசி கையிருப்பு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் தேவைக்கு அதிகமாகவே அது உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரோனல்டு கியாண்டி கூறினார். உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் உத்தரவாதம் கொடுத்தார். அரிசி விநியோகம் மக்களுக்கு  தொடர்ந்து கிடைக்கும் என்று ரோனல்டு கியாண்டி தெரிவித்தார்.

தற்போதைய உள்நாட்டு அரிசி கையிருப்பு சுமார் 532,000 மெட்ரிக் டன் ஆகும். இந்த அளவு புதிதாக உற்பத்தியில் உள்ளதும் மற்றும் இறக்குமதி அரிசியும் அடங்காது என்று அவர் மேலும் விவரித்தார்.

” இன்றைய சூழலில் அரிசி இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை. எப்போதும் போல இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. வியட்நாம் தவிர்த்து தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர், இந்தியா, கம்போடியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட வருகிறது,” என்று தமது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :