Anggota polis dibantu tentera melakukan sekatan jalan raya di Lebuhraya Guthrie menghala ke Shah Alam pada hari keenam pelaksanaan Perintah Kawalan Pergerakan berikutan penularan Covid-19 pada 20 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONAL

காவல்துறை தலைவர்: பிகேபியை மதிக்காத 110 தனிநபர்கள் கைது

கோலா லம்பூர், மார்ச் 25:

கடந்த மார்ச் 18 தொடங்கி அமல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் கட்டுபாடு ஆணையை மீறிய 110 தனிநபர்கள் மலேசிய  காவல்துறையினால் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமீட் பாடோர் தெரிவித்தார். அதில் காவல்துறை அதிகாரிகளை தங்களது பணிகளை செய்வதை தடுத்து நிறுத்தியவர்கள் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

” இந்த நடமாடும் கட்டுபாடு ஆணையை அமல்படுத்தும் பணியில் மொத்தம் 238,000 வாகனங்கள் கட்டளையை மீறியதற்காக தடுத்து நிறுத்தப்பட்டது. பெரும்பாலும் பொறுப்பற்ற செயல்களை சம்பந்தப்பட்ட நபர்கள் செய்தனர். அதில் பொய்யாக பொருட்களை வாங்கியதாக கூறியது அடங்கும். காவல்துறை 370 குற்றப்பத்திரிகைகளை திறந்து இருக்கிறோம். 25 நபர்களை கைது செய்துள்ள நிலையில் 11 பேர்களை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்,” என்று ‘செலமாட் பாகி மலேசியா’ என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியில் ஹாமீட் பாடோர் பேசினார்.


Pengarang :