A computer image created by Nexu Science Communication together with Trinity College in Dublin, shows a model structurally representative of a betacoronavirus which is the type of virus linked to COVID-19, better known as the coronavirus linked to the Wuhan outbreak, shared with Reuters on February 18, 2020. NEXU Science Communication/via REUTERS
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: இன்று 130 புதிய சம்பவங்கள்; மொத்த இறப்புகள் 26 !!!

புத்ராஜெயா, மார்ச் 27:

மலேசியாவில் இன்று 130 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மொத்தமாக 2,161 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

இன்று மூவர் இறந்துள்ள நிலையில், இதுவரையிலும், நாட்டில் மொத்தம் 26 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மரணமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 54 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இன்று 44 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 259-ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :