SHAH ALAM, 18 Mac — Jalan utama di Pusat Bandar Shah Alam kelihatan lengang ekoran perlaksanaan Perintah Kawalan Pergerakan yang bermula hari ini sehingga 31 Mac 2020 sebagai langkah mengekang penularan jangkitan wabak COVID-19 di negara ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 சுனாமியைத் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருப்பீர்! – சுகாதார அமைச்சு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 18-

கோவிட்-19 தொற்றின் 3ஆவது அலையைத் தவிர்க்க மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்படி சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
மலேசிய சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ள நடமாட்ட கட்டுப்பாட்டை பின்பற்றுவது ஒன்றே இந்த வைரஸ் தொற்றை நிறுத்துவதற்கான வாய்ப்பாகும் என்றார் அவர்.

தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை முன்னிட்டு அனைவரும் இந்த நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை கடுமையாக கருதுவதோடு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனமாக எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்த உத்தரவை பின்பற்ற மறுக்கும் நமது அலட்சிய போக்கினல், நடப்புச் சூழல் மேலும் மோசமடைந்து மிகப் பெரிய சுனாமியாக உருவெடுப்பதற்கான சாத்தியம் உண்டு என்றார் அவர்.

கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் நடமாட்ட கட்டுபாடு விதிக்கப்படும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் அறிவித்தார்.


Pengarang :