PUTRAJAYA, 7 Mei — Menteri Kesihatan Datuk Seri Dr Dzulkefly Ahmad semasa sidang media selepas majlis perjumpaan dengan warga Kementerian Kesihatan bulan Mei 2019 bertemakan ‘Pekerja Amanah, Aspirasi Negara’ hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 தொற்று நோயை எதிர்க்க விவேக தொழில்நுட்பம்!

ஷா ஆலாம், மார்ச் 31-

விவேக தொழில்நுட்ப பயனீடு கோவிட்-19 தொற்று நோயாளிகளை அடையாளம் காணும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு சந்தேக நபர்களுக்கு பரிசோதனையையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கான பரிசோதனையை மேற்கொள்ளும்படி வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) பரிந்துரைக்கு ஏற்ப இந்நடவடிக்கை அமைந்திருப்பதாக சிலாங்கூர்
கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது கூறினார்.

“கோவிட்-19 தொற்று நோய் பரிசோதனையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதற்காக கூடுதலாக 10 பரிசோதனை கூடங்களை அதிகரித்திருக்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சின் நடவடிக்கை பாராட்டத்தக்கது” என்று தனது முகநூலில் அவர் குறிப்பிட்டார். எனினும், பொது மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றாத வரை “கோவிட்-19 தொற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்றார் முன்னாள் சுகாதார அமைச்சருமான சுல்கிப்ளி.


Pengarang :