SELANGOR

கோவிட்-19 நிலவரத்தை கண்காணிக்க ஆயர் சிலாங்கூர் சிறப்பு பணிப்படை

கோலாலம்பூர், மார்ச் 24-

கோவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆகக் கடைசியான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சிறப்பு பணிப் படை ஒன்றை அமைக்க ஆயர் சிலாங்கூர் இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் பிறப்பித்துள்ள நடமாட்ட கட்டுபாடு ஆணைக்கு ஏற்ப ஆயர் சிலாங்கூர் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமருல்ஸாமான் தெரிவித்தார்.

அதே வேளையில் கோவிட்-19 பற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் கோவிட்-19 சிறப்பு நடவடிக்கை அறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது, இது திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை காலை மணி 8.30 தொடங்கி மாலை மணி 5.30 வரை செயல்படும் என்றார் அவர்.

“கோவிட்-19 வைரஸ் தொற்றிருந்து எங்கள் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் ஆயர் சிலாங்கூர் பணியிடங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பணிப்படையினர் ஈடுபட்டனர்” என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் சிலாங்கூர் மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களும் கடந்த மார்ச் 19 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன,


Pengarang :