Orang ramai mematuhi jarak selamat satu meter ketika membeli barangan keperluan harian berikutan Perintah Kawalan Pergerakan bagi mengawal wabak Covid-19 di Pasaraya Harian Bhuiyen, Bandar Tun Razak, Cheras pada 24 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: மக்களின் அணுகுமுறையே பிகேபி காலகட்டத்தை முடிவு செய்யும் !!!

கோலா லம்பூர், மார்ச் 30:

அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வருவோரின் விகிதம் 97%-க்கு உயர்ந்துள்ள நிலையில் அரசாங்கம் தொடர்ந்து பொது மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என உறுதி கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் நாட்டு மக்கள் 100% பிகேபியை பின்பற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறது. ஆனாலும், பிகேபி காலகட்டத்தில் அதை பின்பற்றாமல் கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை வரை  649 எட்டிய சூழ்நிலையில் பொது மக்கள் கோவிட்-19 நோயை பெரிதாக கருதவில்லை என்ற மனநிலையில் உள்ளனர் என்றே அர்த்தப்படும்.

மக்களே பிகேபி காலகட்டத்தை முடிவு செய்ய வேண்டும். அப்படி கோவிட்-19 நோய் பரவலின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் இன்னும் சில பொறுப்பற்ற தரப்பினர் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் வரையில் பிகேபி நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என்று நாம் கருத முடியும்.


Pengarang :