Dato’ Seri Amirudin Shari pada sidang media Pengumuman Pakej Rangsangan Selangor Prihatin Covid-19 di Kediaman Rasmi Menteri Besar Selangor di Seksyen 7 pada 20 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGIRKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு: வீட்டிலேயே இருங்கள்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், மார்ச் 25-

நாட்டில் புதிதாக கோவிட்-19 நோய் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று குறைந்த போதிலும் சிலாங்கூரில் அந்த எண்ணிக்கை ஏற்றம் கண்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். நேற்று நாடு முழுவதிலும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையான 106 பேரில் சிலாங்கூரில் இந்நோய் கண்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும் என்றார் அவர்.

எனவே, நாட்டு மக்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை கட்டொழுங்குடன் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.
சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதோடு கிரிமி நாசினி திரவத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் சமூக ஊடகம் வழியாக நினைவுறுத்தினார்.
காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ மையங்களுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :