Petugas pelbagai agensi membuat persiapan sebelum melakukan kerja – kerja pembersihan nyah cemar bagi membendung penularan wabak Covid-19 di sekitar kawasan Sungai Ramal Dalam, Kajang pada 30 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் மக்கள் கூடும் பகுதிகளில் கிரிமி நாசினி தெளிப்பு நடவடிக்கை!

ஷா ஆலம், மார்ச் 31-

வர்த்தகத் தளங்கள் மற்றும் அரசாங்க காட்டடங்களில் கோவிட்-1- பரவலைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்நடவடிக்கை மாநிலத்தில் உள்ள பள்ளி வாசல்கள், சூராவ், கோயில்கள் போன்ற வழிபாட்டு தளங்களிலும் மேற்கொள்ளபடும் என்றும் அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்லும் பொது மக்களுக்கு இந்தத் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தத் துப்புரவுப் பணிகளை ஊராட்சி மன்ற தரப்பினர் மேற்கொள்கின்றனர் என்றார் அவர்.
சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம், சுங்கை பெசார் பேருந்து நிலையம், பண்டார் நக்கோடா ஓமார் பொது சந்தை ஆகிய பகுதிகளில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டதாக அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :