Health workers in protective suits work in a tent erected to test for coronavirus at a clinic, during the movement control order due to the outbreak of the coronavirus disease (COVID-19), in Kuala Lumpur, Malaysia March 23, 2020. REUTERS/Lim Huey Teng
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் மூன்று மாவட்டங்கள் சிவப்பு பகுதிகளாக பிரகடணம்!

ஷா ஆலம், மார்ச் 27-

இதுவரை 41 கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்துள்ள சிலாங்கூரைச் சேர்ந்த மூன்று மாட்வட்டங்கள் சிவப்பு பகுதிகளாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன.
மலேசிய சுகாதார அமைச்சின் கீச்சக புள்ளிவிபத்தின்படி பெட்டாலிங் ஜெயாவில் 167 சம்பவங்களும் உலு லங்காட்டில் 132 மற்றும் கோம்பாக்கில் 53 கோவிட்-19 தொற்று சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சிவப்பு பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள இதர எட்டு பகுதிகளில் லெம்பா பந்தாய், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் பாரு ஆகியவையும் அடங்கும்.
இவைத் தவிர்த்து குளுவாங்கில் 54 சம்பவங்களும் தித்திவங்சாவில் 49 சம்பவங்களும் கோத்தா பாருவில் 48 சம்பவங்களும் மற்றும் ஹிலிர் பேராக்கில் 41 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது உட்பட தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி மலேசிய சுகாதார அமைச்சு நினைவுறுத்தியது.


Pengarang :