KUALA LUMPUR, 2 Mac — Ketua Polis Negara Tan Sri Abdul Hamid Bador (kanan) dan Panglima Angkatan Tentera Malaysia (ATM) Jeneral Tan Sri Affendi Buang (kiri) bersalaman selepas sidang media sempena kunjungan hormat Panglima Angkatan Tentera dan Ketua Polis Negara di Bukit Aman hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALSELANGOR

நாட்டின் அரசியல் நடப்புகளை சிலாங்கூர் மக்கள் விவேகமாக எதிர்கொள்கின்றனர்!

கோல சிலாங்கூர், மார்ச் 1:

நாட்டின் அரசியல் சூழல்களை எதிர்கொள்வதில் மாநில மக்கள் முதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர். பொது அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய எவ்வித போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது இதனை உறுதிப்படுத்தியுள்ளது என்கிறார் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் டத்தோ நோர் அஸாம் ஜமாலுடின் கூறினார்.

இச்சூழலானது முடிவு எடுப்பதிலும் உணர்ச்சி வயப்படாமல் இருப்பதற்கும் சிலாங்கூர் மக்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்றார் அவர்.
“கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இதுவரை எந்தவொரு கலவரம் அல்லது போராட்டம் நடைபெற்றதாக இதுவரை எந்தவொரு புகாரையும் சிலாங்கூர் காவல் துறை பெறவில்லை” என்று அவர் சொன்னார்.
ஆயினும், நாட்டின் அரசியல் நடப்புகளை காவல் துறை கண்காணித்து வருகிறது என்றும் பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :