Datuk Seri Mustapa Mohamed. Foto Sumber: BERNAMA
ECONOMYNATIONAL

நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைப்பு பெற ஆறு மாதங்கள் பிடிக்கும் – முஸ்தபா

கோலா லம்பூர், மார்ச் 30:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில் மலேசிய நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு அடைய குறைந்தது ஆறு மாதங்கள் பிடிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமட் தெரிவித்தார். உடனடியாக வழக்க நிலைக்கு வரவில்லை என்றாலும் மறுசீரமைப்பு பெறும் காலகட்டம் நியாயமான ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.

” அதனால் தான் வங்கி கடன், பிடிபிடிஎன் ஆகிய எல்லா கடன்களும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போடப்பட்டது. இதுவே நமது கணிப்பு, நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம். இருந்தாலும், நாம் மிகச்சிறந்த ஒரு வியூகத்தை வகுத்து பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வோம்,” என்று பெர்னாமா நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு முஸ்தபா வலியுறுத்தினார்.


Pengarang :