Bandar raya Kuala Lumpur kelihatan lengang pada 21 Mac 2020 susulan pelaksanaan Perintah Kawalan Pergerakan bagi mengawal penularan Covid-19. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

நோன்பு மாதச் சந்தை மாற்றி அமைக்கப்படும் – அமைச்சர் அனுவார் மூசா

கோலாலம்பூர், மார்ச் 31:

கொவிட் -19 பாதிப்பைத் தவிர்க்க நோன்பு மாதச் சந்தை மாற்றி அமைக்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார். மக்கள் நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கபப்டும் என்ற் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் விரைவில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேலதிக ஆய்வுகள்  மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூர் அல்லது பிற மாநிலங்கள் இந்த ஆண்டு (ரமலான்) சந்தை இல்லை என்று அறிவித்ததால் நாமும் அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ரமலான் சந்தைகளின் நிர்வாகத்தை இரத்து செய்யாமல் மாற்றியமைக்க வேண்டும், ஏனெனில் இது குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்களுக்கு அவசியமாகும்.

“வேலைக்குப் பிறகு சமைக்க முடியாத நகர்ப்புற மக்களின் தேவைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :