PBTSELANGOR

பந்திங் பொதுச் சந்தையில் நடைமுறைகளை எம்பிகெஎல் அமல்படுத்தியது

பந்திங், மார்ச் 22:

கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகெஎல்) பந்திங் பொதுச் சந்தையில் பொருட்களை வாங்கும் போது நெரிசலை தவிர்க்க புதிய நடைமுறைகளை அமல்படுத்த உத்தேசித்துள்ளதாக அதன் தலைவர் முகமட் ஜைன் ஏ அமீட் தெரிவித்தார். சந்தையின் ஒரு கதவு மட்டுமே திறந்து இருக்கும் என்றும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார்.

” ஒவ்வொரு வாடிக்கையாளரும் சந்தையில் பொருட்களை வாங்கும் போது பாதுகாப்பு தூரமான ஒரு மீட்டர் அளவை கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் பொருட்களை கூட்டத்தில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் கையுறை மற்றும் முகமூடிகள் பயன் படுத்த வேண்டும்,” என்று தமது அறிக்கையில் அவர்  தெரிவித்திருத்தார்.


Pengarang :