Peserta bergambar ketika Majlis Pelancaran dan Penyerahan Watikah Lantikan Pengarusperdanaan Gender (GM) Negeri Selangor berlangsung di Hotel Concorde, Shah Alam pada 10 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGORWANITA & KEBAJIKAN

பாலின சமத்துவத்தை ஏற்படுத்த சிலாங்கூர் மாநிலம் தீவிரம்

ஷா ஆலம், மார்ச் 10-

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்கொள்ள பாலின சமத்துவ திட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழ்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் கொள்கையை அமல்படுத்துவதன் வழி பாலின சமத்துவம் முழுமையாக நிறைவேறுதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு வரைந்துள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது சேவை ஊழியர்கள் மத்தியில் சிலாங்கூர் மகளிர் மேம்பாட்டு கழகம் 2109ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் 43.84 விழுக்காட்டு பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கவில்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். வேலைக்குத் தேர்வு செய்யும் நடவடிக்கையின் பாலினம் பார்த்து வாய்ப்பு வழங்கப்படுவதாக 45.27 விழுக்காட்டினரும் இரு பாலருக்கும் சமமான அளவில் வேலைகள் வழங்கப்படுவதில்லை என்று 24.37 விழுக்காட்டினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று பாலின கவனிப்பு குழு நியமனம் ( ஜிஎஃப்டி) மற்றும் பாலின மையப் புள்ளி குழு ( ஜிஎஃப்பி( கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமிருடின் கூறினார்.
இவ்விரு குழு நியமனங்கள் மூலமாக பாலின சமத்துவத்த்தை அடையும் இலக்கு நோக்கி சிலாங்கூர் மேலும் ஓர் அடி முன்னேறியுள்ளது என்றார் அவர்.


Pengarang :