Anggota polis membuat sekatan jalan raya di Jalan Ampang pada 21 Mac 2020 susulan pelaksanaan Perintah Kawalan Pergerakan bagi mengawal penularan Covid-19. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

பிகேபி உத்தரவை மீறியவர்கள் இரட்டிப்பாகி உள்ளது; கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அனுமதி !!

கோலா லம்பூர், மார்ச் 29:

மலேசிய அரசாங்கம் அமுல்படுத்திய நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) மீறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது என்று பாதுகாப்பு பிரிவின் மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். நேற்று வரை 649 நபர்கள் பிகேபி பின்பற்றாமல் வெளியே நடமாடியதாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமையோடு ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றார் அவர்.

” கைது செய்யப்பட்ட 649 நபர்களில் 73 பேர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆனாலும், பலர் தங்களது தவறான செயல்களை ஒத்துக் கொள்ளவில்லை. காவல்துறையினருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டு விட்டது. நீதிமன்றம் கொண்டு செல்வதை தவிர்த்து அதிகமான அபராதம் விதிக்கப்படும்,” என்று இஸ்மாயில் சப்ரி இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.


Pengarang :