Anggota polis membuat sekatan jalan raya susulan pelaksanaan Perintah Kawalan Pergerakan bagi mengawal penularan Covid-19 di Jalan Ampang pada 21 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

பிகேபி நடவடிக்கையில் மேலும் பலர் கைது !!!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையை மீறிய குற்றச்சாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட எட்டு பேரில் ஒரு உணவக உரிமையாளர் மற்றும் மூன்று வெளிநாட்டினரும் அடங்குவர்.

தாமான் மேடானில் சாலைத் தடுப்புகள் மற்றும் அமலாக்க ரோந்துகள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில், நடமாட்டக் கட்டுப்பாடின் இணக்கத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் விசாரிக்கும் போது, பொதுமக்களில் சிலர் நியாயமற்ற நோக்கங்களை முன்வைத்துள்ளனர் என தெரிகிறது.

இந்த நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரியான அபெண்டி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதாகக் கூறும் ஒரு ஓட்டுனரையும் அவர்கள் தடுத்ததாகக் கூறினார். அவரது முதலாளியிடமிருந்து எந்த உறுதிப்படுத்தல் கடிதங்களையும் அவர் வழங்க தவறினார்.

சாலையில் அல்லது பொது இடத்தில் இருப்பதற்கு ஒரு நியாயமான காரணத்தை வழங்கத் தவறியதால் இரண்டு மியான்மர் பிரஜைகள் மற்றும் ஒரு சீனரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், தாமான் மேடானில் ஒரு உணவக உரிமையாளரை போலிசார் கைது செய்தனர். அவர் தன் உணவகத்தை நள்ளிரவு 12.00மணிக்கும் மேல் திறந்து வைத்துள்ளார் என அறியப்படுகிறது. உள்ளூர் சமையல்காரர்கள் மற்றும் உணவக உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். மேல் விசாரணைகளுக்காக அவர்கள் அனைவரும் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அபெண்டி தெரிவித்துள்ளார்.


Pengarang :