Juwairiya Zulkifli
SELANGOR

புக்கிட் மெலாவாத்தி மக்களுக்காக கோவிட் – 19 உதவி திட்டம்

ஷா ஆலம், மார்ச் 30-

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் உள்ளூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற அலுவலகம் கோவிட் – 19 உதவி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சிரமமான இக்கால கட்டத்தில் வருமானத்தை இழந்த கோல சிலாங்கூர் மக்கள் குறிப்பாக புக்கிட் மெலாவாத்தியைச் சேர்ந்தவர்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளைத் தாங்கள் வழங்கி வருவதாக புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா சுல்கிப்ளி தெரிவித்தார்.

“1,100 பாக்கெட் சமையல் பொருட்கள், கை கழுவும் திரவம் (1,020 போத்தல்கள்) முகக் கவசங்கள் (1,000) மற்றும் விவசாய பொருட்கள் (406 கிலோ கிராம்) போன்றவற்றை நாங்கள் இவர்களுக்கு வழங்கினர்” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.

“பசார் மாலாம் அல்லது சந்தைகளில் சிறிய அளவில் காய்கறிகளை விற்பனை செய்து வந்த விவசாயிகள் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து காய்கறிகளை வாங்குவது இவர்களின் சுமையைச் சற்று குறைக்க உதவும்” என்றார் ஜூவாய்ரியா.


Pengarang :