SELANGOR

போர்ட் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் உணவு பொருட்களை விநியோகித்தார் !!!

ஷா ஆலம், மார்ச் 31:

போர்ட் கிள்ளான் சட்ட மன்ற அலுவலகம் நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்து வருகிறது என போர்ட் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜாமான்ஹூரி தெரிவித்தார். இது வரையில் சுமார் 1000 குடும்பங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார் அவர். அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக கூடிய விரைவில் உதவிகள் வந்து சேரும் என்று அஸ்மிஸாம் உறுதி அளித்தார்.

” தொடர்ந்து உணவு பொருட்களின் விநியோகம் பொது மக்களை வந்து சேரும். எனது சட்ட மன்றத்தில் கீழ் பிகேபி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் போர்ட் கிள்ளான் சட்ட மன்ற மக்களின் சுமையை கொஞ்சம் குறைக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தனது அலுவலகத்தின் பணியாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக அஸ்மிஸாம் உறுதி அளித்தார்.


Pengarang :