NATIONAL

மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா விமானம் பயன்படுத்தப்படும்

ஷா ஆலாம், மார்ச் 23-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கால கட்டத்தில் மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மலேசிய ஆயுதப்படை டுரோன் மற்றும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர் விரிவான மற்றும் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தொழில்நுட்ப பயனீடு உதவும் என்று ஆயுதப்படை தளபதி டான்ஸ்ரீ அஃபெண்டி புவாங் கூறினார்.

“இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்நாட்டு தொழிற்துறை உதவி நமக்கு உள்ளது. ஆனால், டுரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.

“சீனாவைப் போல் நாமும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தலாம். இதனை இன்னும் ஓரிரு தினங்களில் பயன்படுத்தலாம் என நம்புகிறேன்” என்று இன்று செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நேர்காணலில் விவரித்தார்.


Pengarang :