Timbalan Naib Canselor Pentadbiran, Perancangan dan Jaringan Global Unisel, Prof Dr Mohd Nor Nawawi (dua kiri) bersama Rektor UBD, Dr Sunda Ariana Bochari (dua kanan) membuat pertukaran MoU di kampus Bestari Jaya pada 26 Februari. Foto ihsan Facebook Universiti Selangor
RENCANA PILIHANSELANGOR

யுனிசெல் – யுபிடி இடையே அனைத்துலக கல்வி புரிந்துணர்வு ஒத்துழைப்பு

ஷா ஆலம், மார்ச் 1:

சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) முதன் முறையாக பினா தர்மா பல்கலைக்கழகத்துடன் (யுபிடி) அனைத்துலக கல்வி ஒத்தழைப்பு கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கையொப்பமிட்டது.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு உயர் கல்வி பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்கும் ‘சிட் இன் திட்ட’ இயக்கம் தொடர்பிலானது என்று யுனிசெல் நிறுவனத் தொடர்பு இயக்குநர் ஹஸ்ரீல் அபு ஹாசான் தெரிவித்தார்.

“கடந்த ஜனவரி 5ஆம் தேதி பிப்ரவரி 5ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யுபிடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 விரிவுரையாளர்களும் 17 மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை தொடர்பு துறை, விசுவல் மற்றும் கணினி கலை ஆகிய துறைகள் ஏற்று நடத்தின’ என்றார் அவர்.
முன்னதாக. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை யுனிசெல் குளோபல் பிரிவு மற்றும் திட்டமிடல் நிர்வாகப் பிரிவு உதவி துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முகமது நோர் நவாவி நிறைவு செய்தார்.
யுபிடி சார்பில் அதன் அனைத்துலக ஒத்துழைப்பு நிர்வாக இயக்குநர் எம்.இக்பால் ராம்டானி முன்னிலையில் டாக்டர் சுந்தா அரியானா போச்சாரி கையெழுத்திட்டார்.


Pengarang :