Polis melakukan sekatan jalan raya di Kampung Sungai Lui, Batu 21 Hulu Langat pada 30 Mac 2020 susulan Perintah Kawalan Pergerakan Diperketatkan di kawasan tersebut. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

700 சுங்கை லூய் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது – சட்ட மன்ற உறுப்பினர்

ஷா ஆலம், மார்ச் 31:

உலு லங்காட் சுங்கை லூய் கிராமங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுபாடு ஆணையினால் (பிகேபிடி) பாதிக்கப்பட்ட  700 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டது என்று டூசுன் துவா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினர் எட்ரி பைசால் எடி யூசுப் தெரிவித்தார். சமூக நல இலாகாவை தொடர்பு கொண்டு பிகேபிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட எல்லா தரப்பினரும் உணவு பொருட்கள் கிடைக்கும்படி வசதிகள் ஏற்பாடு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

” உணவு பொட்டலங்கள் காலை தொடங்கி இரவு வரை மலேசிய ஆயுதப்படை (ஏடிஎம்) மற்றும் மலேசிய தன்னார்வ அமைப்பு (ரேலா) மூலம் வழங்கப்பட்டது. ஆகவே, உணவு பொருட்கள் ஏப்ரல் 13 வரை  போதுமானதாக இருக்கிறது என்றும் பிகேபிடியினால்  பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் பயம் அடைய வேண்டாம்,” என்று சிலாங்கூர் இன்று தொடர்பு கொண்ட போது இவ்வாறு எட்ரி பைசால் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் பிகேபிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட ஏழு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் அரசாங்கத்தின் கட்டளையை முழுமையாக பின்பற்றி வருவதாக பெருமிதம் கொண்டார்.


Pengarang :