Selangorkini
NATIONAL

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைகிறது !!!

ccsb-ads

புத்ராஜெயா, ஏப்ரல் 10:

நாட்டில் ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி 5 சென் குறைகிறது என நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்த வண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமட் கூறுகையில், உலக எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

ஆதலால், ரோன் 95 ஒரு லிட்டருக்கு ரிம 1.25 ஆகவும், ரோன் 97 ஒரு லிட்டருக்கு ரிம 1.55 ஆகவும் குறைகிறது. டீசல் விலை, லிட்டருக்கு 12 சென் குறைந்து ரிம 1.46 ஆகிறது.


Pengarang :