பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாஜி அப்துல் ஹாடி அவாங் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்குரிய முழு தகுதியுடன் இந்த நியமனம் அமைந்துள்ளது.  தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைந்த பின்னர் முஹீடின் யாசின் அமைச்சரவையில் ஹாடி அவாங் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் அப்போது இடம் பெறவில்லை.

73 வயதான ஹாடி அவாங் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இஸ்லாமிய மத விவகாரங்களில் அனுபவமும், அறிவாற்றலும் கொண்டவராக ஹாடி அவாங் பார்க்கப்படுகிறார். 1994 முதல் 2004 வரை திரெங்கானு மாநில மந்திரி பெசாராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். உலக முஸ்லிம் உலாமா சங்கத்தின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.