SELANGOR

அண்டை அயலாருக்கு உதவும் தொண்டூழிய திட்டத்தில் பங்கேற்பீர்!

ஷா ஆலம், ஏப்.2-

கோவிட்-19 பரவலைத் தடுக்க பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு கால கட்டத்தில் பலவீனமானவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டூழிய திட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் முன் வரவேண்டும் என்று சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாஹ்முட் அழைப்பு விடுத்தார்.

“நடமாட்ட கட்டுப்பாட்டு காலம் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு நல்லதோர் அண்டை வீட்டாராக உதவுவது நமது பொறுப்பாகும்” என்றார் அவர். நீங்கள் தெரிவிக்கும் தகவல் மூலமாக உதவி தேவைப்படுவோர் அடையாளம் காணப்பட்டு தேவையான உதவிகளை செய்ய இயலும் என்று தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு போன்றவர்களுக்கு இந்தத் தொண்டூழியப் பணி பேருதவியாக அமையும் என்றும் அவர் சொன்னார்.
இத்திட்டத்தில் பங்கேற்ற ஆர்வமுள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScte_LLAWOv3jiHCCe9ik9rzCFBs1UN4B_emFa5adW1MXWAEQ/viewform என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.


Pengarang :