Keadaan di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) pada 10 Mac lalu yang dilihat agak lengang dan sunyi berikutan kurangnya para penumpang akibat penularan wabak Covid-19 di seluruh dunia.- Foto BERNAMA
ANTARABANGSA

உலகில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது !!!

அமெரிக்கா, ஏப்ரல் 3:

தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும்  நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  தெரிவிக்கிறது. இப்போது உலகளவில் அதிகமான பாதிப்புகளையும் 50,000 -க்கும் மேற்பட்ட இறப்புகளையும் எட்டியுள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அமெரிக்காவின் பாதிப்பு மற்றும் ஸ்பெயினிலும் இத்தாலியிலும் உலகிலேயே மோசமான சூழ்நிலையில் இருக்கிறது என்று பதிவு செய்துள்ளது.  இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,900-ஐ தாண்டியுள்ள வேளையில் அதைத் தொடர்ந்து ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது வேதனை அளிக்கிறது.

240,000 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளது அமெரிக்கா. ஏற்கனவே அமெரிக்கா உள்நாட்டு விமான பயணத்திற்கான சேவைகளை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :