NATIONALRENCANA

கோவிட்-19 நெருக்கடி காலத்தில் நிதி நிர்வகிப்பு திட்டமிடல் அவசியம்!

கோலாலம்பூர், ஏப்.30-

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று பரவல் எப்போது முடிவுறும் என்ற தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் நிதிநிலையை சிறப்பாக நிர்வகிப்பது அவசியமாகும். வறுமையில் வாடும் பி40 பிரிவினர், எம்40 எனும் நடுத்தர வருமானம் பெறுவோர் உட்பட அனைவருக்கு உதவும் நோக்கத்தில் அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை அமல்படுத்தியுள்ள போதிலும், இந்த நிலை என்று சீரபடும் என்று கணிக்க முடியாத சூழலில் மக்கள் தங்கள் சொந்த நிதி திட்டமிடலைக் கொண்டிருப்பது அவசியமாகும்.

முக்கிய தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதி அத்தியாவசியமற்ற காரணங்களுக்கு செலவழித்த பின்னர் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க இந்த நிதி திட்டமிடல் நடவடிக்கை அவசியம் அமல்படுத்த வேண்டும்.

மாத வருமானம் மற்றும் மாதாந்திர செலவுகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு அதனை நடப்பு நிதி நிலையோடு ஒப்பீடு செய்த பின்னர் முறையாகத் திட்டமிட வேண்டும். இது போன்றதொரு நிலையற்ற காலக் கட்டத்தில் நடப்பு நிதி நிலையை மறு ஆய்வு செய்வதோடு வருமானத்தை அதிகரிக்கும் வழி வகைகளையும் செலவுகளைக் குறைக்கும் வழிகளையும் அடையாளம் காண்பது முக்கியம் என்று கோல திரெங்கானு நிதி ஆலோசனை மற்றும் நிர்வகிப்பு அமைப்பின் (ஏகேபிகே தலைவர் ஜுனாய்டா அகமது ஏசா கூறினார்.)


Pengarang :