Anggota polis, tentera dan rela menutup jalan utama ke kawasan Batu 21 hingga Batu 24 Sungai Lui, Hulu Langat, Selangor berikutan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di Kampung Sungai Lui Batu 21 pada 30 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது; மக்கள் வீடுகளில் இருக்கும் படி வேண்டி மந்திரி பெசார் வேண்டுகோள் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 3:

சிலாங்கூர் மாநிலத்தில்  நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நேற்று 74 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இன்று 11 குறைந்து 63-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்பில் பொது மக்கள் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டி கேட்டுக் கொண்டார் அவர்.

” சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் பிகேபி காலகட்டத்தில் அமைதியாக வீட்டில் இருங்கள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னணி வரிசையில் நமக்காக போராடும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு இறைவனை வேண்டிக் கொள்வோம். கோவிட்-19-ஐ எதிர்த்து நாம் போராடுவோம்! #சிலாங்கூர்கோவிட்19எதிர்த்துபோரிடுவோம்,” மந்திரி பெசார் தமது டிவிட்டரில் பதிவு செய்தார்.


Pengarang :