Petugas Alam Flora melakukan nyahkuman peringkat Majlis Bandaraya Shah Alam di seluruh kawasan Seksyen 6, Shah Alam pada 6, April 2020 bagi mengawal penularan wabak Covid-19. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONAL

கோவிட்-19 : மேலும் 3 இடங்கள் சிவப்பு வட்டாரமாக பிரகடணம்!

ஷா ஆலம், ஏப்.7-

கோவிட்-19 பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை 40ஐத் தாண்டியுள்ள மேலும் 3 பகுதிகள் சிவப்பு வட்டாரங்களாகப் பிரகடணப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. ஜாசினில் 42 சம்பவங்கள், புத்ராஜெயா மற்றும் ரெம்பா ஆகிய பகுதிகளில் தலா 41 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மூன்று புதிய வட்டாரங்களைச் சேர்த்து இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அபாயகரமான பகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என்று டூவிட்டர் வழி வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு தெரிவித்தது. இந்த சிவப்பு வட்டாரப் பட்டியலில் முதல் ஆறு இடங்களாக லெம்பா பந்தாய் (386), உலு லங்காட் (324), பெட்டாலிங் (296), கூச்சிங் (174), குளுவாங் (170) மற்றும் சிரம்பான் (162) ஆகியவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன


Pengarang :