SELANGOR

சட்ட மன்ற உறுப்பினர் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் ‘ஜோம் சொப்பிங்’ கூப்பன்களை வழங்கினார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 7:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டம் தொடங்கியது முதல்  பாதிக்கப்பட்ட  பண்டார் பாரு கிள்ளான் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த 2,200 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ‘ஜோம் சொப்பிங்’ கூப்பன்களை வழங்கியதாக அதன் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். கடந்த ஏப்ரல் 1 தொடங்கி கட்டம் கட்டமாக ஐந்து மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் சென்றடைந்தது என அவர் பெருமிதம் கொண்டார்.

பண்டார் பாரு கிள்ளானில் மாவார் செம்பாக்கா அடுக்குமாடி மற்றும் டாலியா அடுக்குமாடி, ஜாலான் பெக்கான் பாருவில் பெலாங்கி இண்டா அடுக்குமாடி, பண்டார் புக்கிட் ராஜாவில் பெர்மாய் புக்கிட் கூடா அடுக்குமாடி மற்றும் ரெபானா அடுக்குமாடி அதில் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” இந்த பிகேபி காலகட்டத்தில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு நிறைய சிரமங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆகவே, எங்களது உதவிகள் பெற்றவர்களின் சுமையை குறைக்க இது துணை புரியும் என எதிர் பார்க்கிறேன். எங்கள் சட்ட மன்றத்தை தவிர, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் இருக்கும் படியும் மற்றும் மிகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டுகிறோம்,” என்று தமது அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :