Dato’ Seri Amirudin Shari meninjau sekatan jalan di Lebuh Raya Persekutuan yang dilakukan polis dan tentera ketika Perintah Kawalan Pergerakan pada 7 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

சாலைத் தடுப்பு நேரங்களிலும் வாகன போக்குவரத்து அதிகம் – மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்.7-

கடுமையாக்கப்பட்ட இரண்டாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு அமலில் உள்ள போதிலும் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்னும் அதிகளவில் காணப்படுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கூட்டரசு நெடுஞ்சாலையில் ராணுவமும் காவல் துறையினரும் சாலைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இன்று காலை நேரில் பார்வையிட்டபோது இந்தச் சூழலை தாம் கண்ணுற்றதாக அவர் சொன்னார்.

சாலைத் தடுப்பு நடவடிக்கையின் போது பலர் வலுவான நியாயமான காரணங்களை கூறிய போதிலும் அவசியமான பொருட்களை வாங்கச் செல்வதாக கூறுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, நடப்பு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து , நாடு மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை பொது மக்கள் பின் பற்றுவது அவசியம் என்று அவர் கருத்துரைத்தார்.
கோவிட்-19 வைரஸ் பரவலை முற்றிலும் துடைத்தொழிக்க அனைத்து தரப்புகளும் முக்கிய பங்காற்றுவதோடு ஒத்திழைப்பதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :