Dato’ Seri Amirudin Shari mengumumkan Pakej Rangsangan Ekonomi Selangor 2.0 di Kediaman Rasmi Dato’ Menteri Besar, Shah Alam pada 1 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
ECONOMYRENCANA PILIHANSELANGOR

சிறு வர்த்தகர்கள் அனைவரும் சிலாங்கூர் பரிவுமிக்க உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்வீர்!

ஷா ஆலம், ஏப்.16-

சிலாங்கூரில் உள்ள சிறு வர்த்தகர்கள் மற்றும் அங்காடி கடைக்காரர்கள் ரிம.500 சிறப்பு ஊக்குவிப்புத் தொகையைப் பெறுவதற்கு selangorprihatin.com எனும் இணையத்தளம் வழி விண்ணப்பிக்கலாம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த விண்ணப்பத்திற்கான இறுதி நாள் ஜூன் 7ஆம் தேதி ஆகும் என்றார் அவர்.

முன்பு இந்த உதவித் தொகை ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அங்காடி கடைக்காரர்கள் மட்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இத்திட்டம் விவசாய சந்தை, அனைத்து அங்காடிக் கடைகள், பொது சந்தை மற்றும் உணவு சந்தை ஆகியவற்றுக்கும் விரிவுப் படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, சிலாங்கூர் பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரிம.500 உதவித் தொகை ஊராட்சி மன்ற கட்டடங்களில் வாடகைக்கு இருக்கும் உரிமம் பெற்ற அனைத்து வர்த்தகர்களுக்கும் வழங்க மாநில அரசாங்கம் சம்மதித்தது.


Pengarang :