(Gambar hiasan) Beberapa wanita membeli juadah berbuka puasa di bazar Ramadhan Seksyen 13, Shah Alam pada 6 Mei 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALSELANGOR

சிலாங்கூரில் ரமலான் சந்தை ரத்து- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்ரல் 1:

தற்போது நாட்டில் தீவிரமாகபரவி வரும்  கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ரமலான் சந்தை  செயல்பாட்டை ரத்து செய்ய மாநில ஆட்சிக்குழு இன்று முடிவு செய்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூரின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரமலான் சந்தை  நடத்த சுகாதார அமைச்சு அனுமதித்தால், அந்த பரிந்துரையை சிலாங்கூர் ஏற்றுக் கொள்ளும் என்றார்.

“நாங்கள் இன்று ஒரு மாநில ஆட்சிக்குழு  கூட்டத்தில் ரமலான் சந்தையை ரத்து செய்ய உத்தரவுகளை பிறப்பிப்போம். சிலாங்கூர் முழுவதும் ரமலான் சந்தை  ரத்து செய்யப்படும்.

சிலாங்கூரில் ரமலான்  சந்தை இயங்குவதற்கான அனுமதி குறித்த மாநில அரசின் முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்கும்படி செய்தியாளர்கள் கேட்டபோது, “ சுகாதார அமைச்சு அவ்வாறு செய்ய அனுமதித்தால் மட்டுமே அது நடத்தப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், ஆன்லைனில் ரமலான் சந்தை  இருக்கும் என்று தான் நம்புவதாக அமிருடின் கூறினார்.


Pengarang :