Pasukan polis dibantu tentera melakukan sekatan jalan raya di Jalan Ampang pada hari keenam pelaksanaan Perintah Kawalan Pergerakan berikutan penularan Covid-19 pada 23 MAC 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

சிலாங்கூரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பிகேபியை பின்பற்றி வருகின்றனர் – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்ரல் 9:

இரண்டாம் கட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) எதிர் வரும் ஏப்ரல் 14 வரை நீடிக்கும் நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பின்பற்றி வருவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பெருமிதம் கொண்டார். இதற்கு முன்பாக 80 சதவீதம் மட்டுமே என்று சிலாங்கூர் காவல்துறை அறிவித்தது என்றும் தற்போதைய அடைவுநிலை மிகவும் எழுச்சியூட்டும் வகையில் இருக்கிறது என்றார்.

” பிகேபி முதன் முதலாக செயல்படுத்த முற்பட்ட போது பொது மக்களின் ஆதரவு 80% மட்டுமே. ஆனால், தற்போது 90 முதல் 93 சதவீதம் வரை மக்கள் பின்பற்றுவதை எனக்கு தெரிவித்தார்கள். மலேசிய மக்கள் அனைவரும், குறிப்பாக சிலாங்கூர் வாழ் மக்கள் பிகேபி நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வீட்டில் அமைதியாக இருங்கள்,  வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். இதுவே கோவிட்-19 நோயை நாம் கட்டுப்படுத்தக் கூடிய சரியான வழியாகும்,” என்று டிவி3 மலேசிய ஹாரி இனி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார்.


Pengarang :