RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநிலத்தில் குற்றங்களின் சதவீதம் 18.3% குறைந்துள்ளது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 20:

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் ஜனவரி முதல் நேற்று வரையிலான குற்றங்களின் எண்ணிக்கை 18.31% அல்லது 1048-ஆக குறைந்துள்ளது என சிலாங்கூர் மாநில காவல்துறையின் ஓப்ஸ் கோவிட்-19 பேச்சாளர் ஏசிபி முகமட் யாஸிட் முகமட் இவு தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 5,723 பதிவு செய்யப்பட்ட வேளையில், இந்த ஆண்டில் 4,675 மட்டுமே என அவர் பெருமிதம் கொண்டார்.

” கடந்த மார்ச் 18-இல் தொடங்கிய நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) இதற்கு முக்கிய காரணம் என்பதை காவல்துறை மறுக்கவில்லை. பிகேபி காலகட்டத்தில் பொது மக்கள் வெளியே வருவது குறைவு. ஆகவே, குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்பு குறைவு. இருந்தாலும், நாம் இதை ஆய்வு நடத்த வேண்டும்,” என்று சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.


Pengarang :