SELANGOR

சிலாங்கூர் விவசாய குடிமக்கள் அடிப்படை உணவு உதவிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம்

ஷா ஆலம், ஏப்.6-

மாதம் 1,500 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் ஈட்டும் சிலாங்கூர் விவசாய குடிமக்கள், மாநில அரசாங்கத்தின் அடிப்படை உணவு உதவிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று விவசாயத் துறை ஆட்சிக் குழு உறுப்பினார் இஸாம் ஹாஷிம் கூறினார். சிலாங்கூரின் 2ஆம் கட்ட பரிவுமிக்க உதவித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள இதற்கு விவசாயிகள், கால் நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவர்கள் விண்ணப்பிகலாம் என்றார் அவர்.

“இதற்கு முன்னர் அடிப்படை உணவு உதவிக்கு விண்ணப்பிக்காதவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்நேரத்தில் இந்த உதவியானது சம்பந்தப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் https://bit.ly/3441hg9 என்ற இணையத் தளம் வழி விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் விவரங்கள் அறிய [email protected] என்ற மின் அஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

நவின விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்காக 2ஆம் கட்ட சிலாங்கூர் பரிவுமிக்க உதவி திட்டத்தின் கீழ் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இஸாம் தெரிவித்தார்.


Pengarang :