Sekatan jalan raya dilakukan polis bersama tentera semasa Perintah Kawalan Pergerakan di Pekan Dengkil, Kuala Langat pada 3 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONAL

ஜேபிஜே ஒத்துழைப்புடன் ரோந்து நடவடிக்கைகளை போலீஸ் அதிரிக்கும்!

ஷா ஆலம், ஏப்.10-

நடமாட்ட கட்டுப்பாடு காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைத் தடுப்பு நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) உட்பட்டிருப்பதால் ரோந்து நடவடிக்கைகளை போலீஸ் அதிகரிக்கும் என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கட்டுப்பாடு ஆணையை பொதுமக்களில் 97% பின்பற்றுக்கின்றன போதிலும், இந்நடவடிக்கையில் ஜேபிஜே மற்றும் மலேசிய ராணுவப் படையின் ஒத்துழைப்பு நேற்று தொடங்கியுள்ளதாக அவர் சொன்னார். இந்த ஒத்துழைப்பு காரணமாக ரோந்து நடவடிக்கைகளும் அதிரடி சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றிரவு வரையில் மொத்தம் 775 இடங்களில் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளின் போது 508,605 வாகனங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
அதே வேளையில், 38,854 அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு 5,528 கடைகள் மீதும் அமலாக்கத் தரப்பின் சோதனை நடத்தினர் என்றார் அவர்.


Pengarang :