NATIONALSELANGOR

தனிமைப்படுத்தும் மையத்திற்கு சிலாங்கூர் விவேக பேருந்து மக்களை அழைத்துச் செல்லும் – மந்திரி பெசார்  

ஷா ஆலாம், ஏப். 2-

சிலாங்கூர் அரசாங்கம் சுகாதார அமைச்சு நிர்ணயித்த விதிகள்படி தனது சிலாங்கூர் விவேக பேருந்து வழி விமான நிலையம் வந்தடையும் பயணிகளை தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்லும் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டது. கோவிட் – 19 தொற்று நோய் பரவலைத் தடுக்க அனைத்து வகையான வேறுபாடுகளையும் களைந்து நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இதன் காரணமாகவே சுகாதார அமைச்சு மற்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தொடக்கத்திலேயே நான் கூறியிருந்தேன். சிலாங்கூர் மாநிலம் நாட்டின் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது இதற்கு மற்றொரு காரணமாகும் ” என்று அவானி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் – 19 தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ) மற்றும் சுபாங் விமான நிலையம் வந்தடையும் அனைத்து பயணிகளும் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பிரத்தியேக இடத்தில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட அரசாங்கம் முடிவு செய்தது.


Pengarang :