NATIONALSELANGOR

தெரிவிக்காமல் இருந்தால் கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 8:

புதிய கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து பதிவு செய்து வருவது அதன் தொடர் தாக்கத்தை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். தற்போது தெரிவிக்காமல் அமைதியாக இருக்கும் நபர்களை பற்றி கவலையாக இருக்கிறது என்றும் இது நோய் பரவுவதை தடுக்க பாடுபட்டு வரும் அரசாங்க அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர் விவரித்தார்.

” கோவிட்-19 நோய் சம்பவங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்தாலும், அரசாங்கம் கட்டுப்படுத்த முடியும். ஆனால், நோய் கண்டிருக்கும் நபர்கள் தெரிவிக்காமல் இருந்து வந்தால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று பெர்னாமா வானொலியோடு நேரலையில் அமிருடின் ஷாரி இவ்வாறு கூறினார்.


Pengarang :