Dr Siti Mariah Mahmud berucap ketika Majlis Apresiasi Sedekad Pusat Wanita Berdaya di Shah Alam Convention Centre, Shah Alam pada 7 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

பிகேபி: தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு தயார்!

ஷா ஆலம், ஏப்.9-

நடமாட்டு கட்டுபாடு காரணமாக செய்யும் தொழில் அல்லது வேலை பாதித்துள்ள தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவ மாநில அரசு உதவித் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக நலத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மாரியா மாஹ்முட் கூறினார். இந்த உதவித் திட்டத்திற்கு சிலாங்கூர் ஷாரியா நீதித்துறை இலாகாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் திட்டத்திற்கான தகுதிகள்:

1. மலேசிய குடியுரிமை பெற்ற தனித்து வாழும் இஸ்லாமிய தாய்மார்கள்
2. மாதம் ரிம, 2,000க்கும் குறைவான வருமானம் அல்லது நிரந்தர வருமானம் இல்லாதோர்
3. சிலாங்கூரில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வாழ்வோர்
4. விவாகரத்து பெற்றவர்கள்
5. 18 அல்லது 21 வயதுக்கு மேற்போகாத பிள்ளைகள் உடையவர்கள்
6. மாநில ஷாரியா நீதித்துறையின் குடும்ப நலப் பிரிவில் இருந்து இதுவரை உதவித் தொகை பெறாதவர்கள்

இது குறித்து விண்ணப்ப பாரம் அல்லது மேலும் விவரங்கள் அறிய http://jakess.gov.my/index.php/ms/ என்ற அகப்பத்தை வலம் வரலாம் அல்லது மாநில அரசு குடும்ப நலத் துறையுடன் 010-559 5935 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,


Pengarang :