Ketua Polis Negara, Tan Sri Abdul Hamid Bador (pertama, kanan) membuat tinjauan sekatan jalan raya oleh anggota polis di Kampung Sungai Lui, Batu 21, Hulu Langat pada 30 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

பிகேபி நடவடிக்கை தொடங்கியது முதல் 4,189 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 2:

நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) தொடங்கியது முதல் நடைமுறைகளை மீறியதற்காக 4,189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் 1,449 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இருப்பினும் , மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

“ நடமாடும் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காக சாலைத் தடைகள் மற்றும் போலிஸ் ரோந்துகளின் போது 562 பேரை போலீசார் தடுத்து வைத்தனர். இது கைதுகளின் எண்ணிக்கையில் 3.6 சதவீதம் குறைப்பைக் குறிக்கிறது. இந்த சரிவு உத்தரவுக்கு மக்கள் இணங்குவதைக் காட்டினால், அது ஒரு நல்ல விஷயம், அரசாங்கமும் அதை தான் எதிர்நோக்கியுள்ளது” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக மட்டுமல்லாமல், போலிஸ் உத்தரவுகளை மீறுவது போன்ற பிற குற்றங்களைச் செய்ததற்காகவும் தனிநபர்களுக்கு 8 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் உள்ளன என்று இஸ்மாயில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்கான அதிகபட்ச அபராதம் 6 மாத சிறைத்தண்டனை, அல்லது RM1,000 அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.


Pengarang :