NATIONAL

பிரதமர் சுகாதார அமைச்சின் விளக்கத்தின் பிறகு பிகேபியின் தலைவிதியை நிர்ணயிப்பார் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 9:

பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் ஏப்ரல் 10-இல் கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா இந்த அறிவிப்பிற்கு முன்னர் விரிவான விளக்கத்தை பிரதமருக்கு கொடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

” பிரதமர் கோவிட்-19 நோயை நாட்டில் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவிப்பார்,” என்று நூர் ஹிஸாம் சுகாதார அமைச்சின் செய்தியாளர்கள் கூட்டத்தில் இன்று இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்பாக தகவல் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை அன்று பிகேபி நீட்டிக்கப்படுமா அல்லது முடிவுக்கு கொண்டு வருமா என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :