ECONOMYNATIONAL

புதிய சந்தையின் பொருளாதார வளர்ச்சி மோசமாக சரிவு காணும்

கோலாலம்பூர், ஏப். 29-

கோவிட் – 19 காரணமாக சீனாவைத் தவிர்த்து உலக பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்ட நிலையில் பொருளாதார செலவினம் மிக மோசமாக அதிகரித்துள்ளது.
இத்தொற்று நோய்க்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டுக்கான புதிய சந்தையின் பொருளாதார வளர்ச்சி 3.2 விழுக்காட்டை எட்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இது – 3.5 விழுக்காடு நிலைக்கு சரிவு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு சீனாவின் பொருளாதாரம் ஒரு விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் கணித்துள்ளது. ஜி-20 மேம்பாடடைந்த நாடுகளின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 5.8 விழுக்காடு சரிவு காணும் என்று அறிக்கை ஒன்றின் வழி இந்நிறுவனம் குறிப்பிட்டது.


Pengarang :