NATIONALSELANGOR

பொது மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியம்; 24 மணி நேரமும் விழிப்பு நிலையில் சிலாங்கூர் பணியாளர்கள் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 23:

முன் வரிசை பணியாளர்களாக பணிபுரியும்  சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்கள், மாநில அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசாங்கம் வலியுறுத்தியது.

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் சிலாங்கூர் மாநில கோவிட்-19 நடவடிக்கை அறையில் இருந்த வண்ணம் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

” கோவிட்-19 நெருக்கடி நிலையில் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்  முன் வரிசை பணியாளர்கள். கோவிட்-19 நடவடிக்கை அறையில் இருந்து சிலாங்கூர் மாநில நிலவரங்களை 24 மணி நேரமும் விழிப்பு நிலையில் இருக்கிறோம். வாரத்தில் ஏழு நாட்களும் இடைவிடாது பணியில் அமர்த்தப்பட்டு சிலாங்கூர் வாழ் மக்களின் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கின்றனர். முன் வரிசை பணியாளர்களின் அர்ப்பணிப்பை நாம் மதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தயவுசெய்து வீட்டில் இருக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்கிறோம். பிகேபியை பின்பற்றுங்கள். கோவிட்-19 நிலையை முடிவு செய்யும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது,” என்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.


Pengarang :